சேத்தியாத்தோப்பு பேரூராட்சி கிளாங்காடு தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம். மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி கிளாங்காடு தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம். மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி கிளாங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் மற்றும் சேத்தியாத்தோப்பு நகர பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து பள்ளி மாணவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு நோட்டு,பேனா, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், சாக்லேட் வகைகள் வழங்கப்பட்டது. கல்வி கற்றலின் அவசியம் பற்றியும், உடற்பயிற்சி செய்யும் முறைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
   

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நகரத் தலைவர்ANG. லோகநாதன், அரிமா சங்க மாவட்டத் தலைவர் டாக்டர். மணிமாறன், பொருளாளர் வினோத் கண்ணன், செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில மாணவர் சங்கத் தலைவர் ஞான விஷ்ணு, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் தில்லை ராஜா, ஒன்றிய செயலாளர் முருகானந்தம், சேத்தியாதோப்பு நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர்SKP. கலைமணி, மாவட்ட இளைஞர் சங்க துணைத் தலைவர் இளங்கோவன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் ஆசிரியைகள் சுதந்திர தினத்தின் சிறப்புகளைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். நிறைவாக பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமலதா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad