மேட்டுப்பாளையம் வட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி அவர்கள் ஆய்வு !
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து வட்டார கல்வி அலுவலர் திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் 6 வடநாட்டு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதும் ராமசாமி நகரில் 1மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது .இதன் அடிப்படையில் மேற்கண்ட 6 மாணவர்களை சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியிலும் ராமசாமி நகர் பகுதியில் பள்ளி செல்லாமல் இருந்த 1 மாணவனை மேட்டுப்பாளையம் நகராட்சி அண்ணா நகர் துவக்கப் பள்ளியிலும் சேர்த்து தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கல்வித்துறையில் அலுவலர்களில் இச்செயல்பாடு பொதுமக்களிடையே நல்ல வரவேற்புரை விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக