பிரதமருக்கு கொடுத்த மனு மீது நடவடிக்கை கேட்டு விசிக ,லோக் ஜனசக்தி, சிபிஐ எம்எல் தடையைமீறிஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

பிரதமருக்கு கொடுத்த மனு மீது நடவடிக்கை கேட்டு விசிக ,லோக் ஜனசக்தி, சிபிஐ எம்எல் தடையைமீறிஆர்ப்பாட்டம்.

பிரதமருக்கு கொடுத்த மனு மீது நடவடிக்கை கேட்டு விசிக ,லோக் ஜனசக்தி, சிபிஐ எம்எல் தடையைமீறிஆர்ப்பாட்டம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்காக குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் தற்போது அனுமதி அளித்தது. ஆனால்
குளங்களில் விவசாயத்திற்காக அனுமதி பெற்று சுமார் ரூபாய் 1000/- கோடிகளுக்கு மேல் முறைகேடாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மணல் அள்ளியுள்ளது.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக வண்டல் மண் எடுப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட குளங்களின் புகைப்படம், வண்டல் மண் அள்ளும்போது உள்ள புகைப்படம், வண்டல் மண் அள்ளிய பிறகு குளத்தின் புகைப்படம் அதுபோல் விவசாய தேவைக்காக அனுமதி பெற்ற நிலங்களின் மணல் கொட்டுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், மணல் கொட்டும்
புகைப்படம், மணல் நிரப்பிய பின்பு சம்பந்தப்பட்ட நிலத்தின் புகைப்படம் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தவும் எந்தெந்த குளங்களில் எவ்வளவு யூனிட் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது 

தற்போது எவ்வளவு மண் எடுக்கப்பட்டது என்பதை அளவீடு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய 
மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை
பொறியாளர்கள் வட்டாட்சியர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மத்திய அரசின் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்யபட வேண்டும் 

மேலும் வண்டல் மண்ணுக்கு அனுமதி வழங்கிய சர்வே எண்களை நிரந்தர விவசாய நிலம் என அரசிதழில் அறிவித்து வீட்டு மனைக்கு அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்த DTCP, உள்ளாட்சித் துறை, நீர் வளத்துறை, பத்திர பதிவுத்துறை, வருவாய் துறை உட்பட்ட அரசு துறைகளுக்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ எம்எல் ரெட்ஸ்டார், லோக் ஜனசக்தி கட்சி சார்பில் 

இந்திய பிரதமர், அமலாக்கத்துறை இயக்குனர் ஆகியோருக்கு கொடுத்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டு கன்னியாகுமரி மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையை மீறி நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு 
CPI - ML Red Star மாவட்டசெயலாளர் மணவைகண்ணன் தலைமை வகித்தார் விசிக மாவட்ட செயலாளர் அல்காலித், லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் தர்மகண்ணு. விடுதலை தேசம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரபு மற்றும் தனேஷ், ராஜ்மோகன், புஷ்பம் ,கணேசன், உட்பட 47 பெண்கள் 13 ஆண்கள் என 60 பேர்கள் கலந்து கொண்டனர்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad