கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

 


கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா முன்னிட்டு கொட்டையூர் வள்ளலார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சியில் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க தலைவர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.செயலாளர் கருணாகரன், பொருளாளர் சிவராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்..


சிறப்பு விருந்தினராக பள்ளித் தலைவர் தயாளன்,செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்."தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் சுதந்திரக்காக போராடிய தலைவர்களின் வாழ்க்கை குறித்த நாடகங்கள், பேச்சுப்போட்டி , நடன நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் மருதையன், அசோகன், பிஆர்ஓ ரவிக்குமார், 

 

தலைமையாசிரியர் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க சாசனத் தலைவர் இரவி செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad