ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்!
தேர்தல் அறிக்கையின்படி 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10% உயர்த்திட கோரிக்கை
வேலூர் , ஆகஸ்ட் 13 -
வேலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேர்தல் அறிக்கை யின்படி 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூ தியர்களுக்கு 10% உயர்த்திட கோரிக்கை
தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 70வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங் கிட தமிழ்நாடு அரசை கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த் தனன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் டி.மனோகரன் வரவேற்று பேசினார். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எ.அப்துல்ரஹீம், சிறப்பு அழைப்பாளர் களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
ஓய்வு பெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.மகாலிங்கம், மகளிர் அணி பி.மஞ்சு ளா, டி.என்.ஷோபா, ஆகியோர் முன்னி லை வகித்தனர். செயற்குழு உறுப்பி னர்கள் எ.ஜெயதேவரெட்டி, என்.இளங் கோவன், ஆர்.தாமேதரன், ஜி.விநாயகம், ஜி.ஆறுமுகம் எஸ்.சச்சிதானந்தம்கே.பொ ன்னுசாமி, எஸ்.முருகேசன், ஆகியோர் பேசினர். பின்னர் பின்வரும் தீர்மானங் கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
1.தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 80 வயது துவக்கத்திலேயே ஓய்வூதியத் தொகையினை இருபது சதவிகிதம் உயர் த்தி வழங்க கோரியும் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்கைள் அனைவருக்கும் 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்திவழங் கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
2.ஓய்வூதிய தொகுப்பு (கமுடேசன்) தொ கையினை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக குறைத்திடுக
3.மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஆந்திர மாநில அரசு 40 சதவிகித சலுகையில் பயணம் மேற்கொ ள்ள அனுமதி அளித்துள்ளது போல் தமிழ் நாடு அரசும் மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கோரி தீர்மானிக்கப் பட்டது.
4.காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிக ளை களையவும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறக் கூடிய வகையில் புதிய காப்பீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத் தவும் இத்திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட கோரியும் தீர்மானிக்கப்பட்டது.
5.காப்பீட்டு செலவினத்தொகை திரும்ப பெறும் நடைமுறைகளை எளிமைபடுத் திட கோருவது
6.பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை செப்டம்பர் 5ஆம் தேதி வேலூர் ஆசிரியர் இல்லத்தில் பாராட்டி கௌரவிக்கும் விழா நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.
7.ஓய்வூதியர்கள் அனைவருக்கு வரு மான வரி செலுத்துவதிலிருந்து விலக் களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் செயற்குழு உறுப்பினர் ஜி.விநாயகம் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக