மானாமதுரை பகுதியில் கிருஷ்ணர் - ராதை வேடங்களில் ஜொலித்த குட்டீஸ். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

மானாமதுரை பகுதியில் கிருஷ்ணர் - ராதை வேடங்களில் ஜொலித்த குட்டீஸ்.

 


மானாமதுரை பகுதியில் கிருஷ்ணர் - ராதை வேடங்களில் ஜொலித்த குட்டீஸ்.


ஆண்டுதோறும் கிருட்டிணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவான "கிருஷ்ண ஜெயந்தி" விழா நடப்பு 2025 ஆம் ஆண்டு விசுவாவசு வருடம் ஆடி மாதம் 31ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி திதியில் (ஆகஸ்ட் 16 ஆம் தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜன்மாஷ்டமி , கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இவ்விழாவானது இந்தியா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகங்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு இந்து பண்டிகையாகும். கிரிகோரியன் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்வது வழக்கம். 


இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் ஆங்காங்கே கிருஷ்ண ஜெயந்தி விழாவானது கிருஷ்ண பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக பொதுமக்கள் தங்கள் இல்லத்தில் உள்ள குட்டீஸ்களுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு இல்லத்திற்குள் கிருஷ்ணரின் வேடத்தில் உள்ள குட்டீஸ்களின் பாதங்களை பதித்து, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சி அடைவது என்பது கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஒரு இனிய நிகழ்வாகும். படத்தில் காண்பதுபோல் மானாமதுரை பகுதியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் மற்றும் ராதை என்று பாவித்து தங்களின் உள்ளார்ந்த ரசனையோடு வேடமிட்டு அக்கால கிருஷ்ணன் மற்றும் ராதையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் என்பதே நிதர்சனம். தொன்று தொட்டு வரும் இப்பாரம்பரிய விழாவை குட்டி சுட்டீஸ்களோடு சாதி மதம் கடந்து வரலாற்றை பின்பற்றி வரும் அனைத்து பெற்றோர்களுக்கு ஒரு சல்யூட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad