தமிழகத்தில் பல மாவட்ட விவசாயம் செழிக்க நீலகிரியில் நதிகளை இணைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

தமிழகத்தில் பல மாவட்ட விவசாயம் செழிக்க நீலகிரியில் நதிகளை இணைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை


 தமிழகத்தில் பல மாவட்ட விவசாயம் செழிக்க நீலகிரியில்  நதிகளை இணைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை 

 

பாண்டியாறு- மாயாறு இணைப்பு பல மாவட்டங்களை வளமாக்கும் என திட்டவட்டம் 


இயற்கை.அன்னையின் அற்புத ஆட்சியில்  கண்கெள்ளா காட்சிகளை தரும் ஓவேலி  சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த பகுதியாகும் என்பது குறுப்பிடதக்கதாகும்  


சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் 1800களில் உருவான பெரிய தேயிலை மற்றும் காப்பி தோட்டங்கள்,பழமையான தேயிலை தொழிற் சாலைகள்,பல அரசு பள்ளிகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன


நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் ஓவேலி அமைந்துள்ளது


இப்பகுதியில் தேயிலை முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளகு, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பகுதியாகும்.


கூடலுார் பகுதியில் உற்பத்தியாகும், பாண்டியாறு - புன்னம்புழா ஆறு கேரளா மாநிலம் சாளியாற்றிலும்; மாயாறு ஆறு, பவானி ஆற்றிலும்; பொன்னானி ஆறு காவிரி ஆற்றிலும் முக்கிய கிளை ஆறான கபினி ஆற்றிலும் கலக்கின்றன.


இதனால், இப்பகுதி தென்னகத்தின் நீர் தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் முக்கிய ஆறுகளின் கிளை ஆறுகள், ஓவேலி வனப்பகுதியில் உற்பத்தியாகின்றன.


 இங்குள்ள ஹெலன் ஆற்று நீர், கூடலுார் நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது."

 

இப்பகுதியில், ஏராளமான நீர்நிலைகள் உற்பத்தியாகி, கோடையில் மக்களுக்கு மட்டுமின்றி வன விலங்குகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்து வருகின்றன."

 

ஓவேலி பேரூராட்சிப் பகுதிகளில், மலைக்குன்றுகளிலும் உற்பத்தியாகும் ஆறு 'பாண்டியாறு’ எனப்படுகிறது.


ஆராட்டுப்பாறை என்ற இடத்தில், பாண்டியாறு, புன்னம்பழா ஆகியவை ஒன்று சேர்ந்து காட்டாறாக பெருக்கெடுத்து ஓடி கேரளா பகுதிக்குள் நுழைந்து 'சாலியாறு’ என்ற பெயரில், எந்தப் பாசனத்திட்டமும் இல்லாமல் வீணாக அரபிக்கடலில் கலக்கிறது


தற்போது ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதியில் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் அதிக தண்ணீர் ஓடுகிறது


பெரும் பாறைகள் அதிகமாக கொண்ட அந்த ஆற்றில் பாறைகளுக்கு இடையே தண்ணீர் ஆர்பரித்து ஓடுகிறது


தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஓவேலியில் உற்பத்தியாகும் ஆறுகளை, மாயாற்றுடன் இணைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


"பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றின் முக்கிய கிளை ஆறுகள்  ஓவேலி பகுதியில்தான்  உற்பத்தியாகின்றன. இதில், சூண்டி சுண்ணாம்பு ஆறு, பார்வுட் ஆறுகள் மிக முக்கியமானவையாகும் 


ஓவேலி, தேவாலா, புளியாம்பாறை ஆறுகளை மாயாற்றுடன் இணைப்பதன் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயனடைய அதிக வாய்ப்புகள் உள்ளது


சிறிய தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் இந்த ஆறுகளின் நீரை மாயாற்றில் இணைக்க  முடியும் .


தமிழகத்தில் பல மாவட்ட விவசாயம் செழிக்க நீலகிரி ஓவேலி பகுதி  நதிகளை மாயாற்றுடன்  இணைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பாண்டியாறு- மாயாறு இணைப்பு என பது  பல மாவட்டங்களை வளமாக்கும் அற்புதமான செயல் திட்டமாக இருக்கும்  எனவும் சமுக ஆர்வலர்கள்  திட்டவட்டமாக தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad