கார் மோதியதில் தனியார் கல்லூரி மாணவர்கள் படுகாயம்
பெரியநாயக்கன்பாளையம் அருகே கவுண்டம்பாளையத்தில் இன்று மாலை இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இதே பகுதியைச் சார்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் இரண்டு கல்லூரி மாணவிகள் உட்பட நான்கு பேர் படுகாயமுற்றனர். இவர்கள் அனைவரும் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக