இந்திய நாடு மத சார்பற்ற சனநாயக நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே அதன் தனிப்பெரும் சிறப்பு. ஆனால் பல தருணங்களில் சிறுபான்மையினர் என்ற முறையில் சிறுமைப்படுத்தப்படுவது அன்றாடம் அரங்கேறி வருவது நம்மில் காயத்தையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கேரளாவைச் சார்ந்த இரண்டு அருட்சகோதரிகள் கட்டாய மதமாற்றம் செய்தார்கள் என்று பழி சுமத்தி நீதிக்கு புறம்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து நாசரேத், பேருந்து நிலையம் அருகே நாளை 03.08.2025, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கத்தோலிக்க திருச்சபை & தென்னிந்திய திருச்சபை இறைச் சமூகம் - நாசரேத் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக