திருநெல்வேலி இறகு பந்தாட்ட கழக தலைவர் மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் லயனல் ராஜ் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக இந்திய இறகு பந்து கழக செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு இறகு பந்து கழக பொதுச்செயலாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இறகுப்பந்தாட்ட கழக துணைச் தலைவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட இறகு பந்தாட்ட கழகச் செயலாளர் கிளமெண்ட், தமிழ்நாடு இறகு பந்தாட்ட கழக துணைத் தலைவரும் மதுரை மாவட்ட இறகு பந்தாட்ட கழக செயலாளர் ராமகிருஷ்ணன்,
திருநெல்வேலி இறகு பந்து கழக மூத்த ஆலோசகர் ஜெகநாதன்,ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.திருநெல்வேலி மாவட்ட இறகு பந்தாட்ட கழக செயலாளர் ரவிந்திரன் நன்றி கூறினார்.
திருநெல்வேலி மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தின் சிறப்பம்சங்கள்:
உலகத்தரம் வாய்ந்த உள்விளையாட்டு அரங்கம் எட்டு ஆடுகளங்கள் தற்போது உள்ளது 12 ஆடுகளங்கள் வரை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் தொழிற்சார்ந்த பயிற்சிகளுக்கு சர்வதேச இறகு பந்து பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்படும் மாதச் சந்தா மற்றும் ஆண்டு சந்தா உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மனமகிழ் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு மணிக்கணக்கிலும் வாரக் கணக்கிலும் சந்தா திட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக