தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு எழுத்து உபகரணங்கள் வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு எழுத்து உபகரணங்கள் வழங்கல்.

கடலூர் – ஆகஸ்ட் 25
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள வழுதலம்பட்டு வடக்கு புனித சூசையப்பர் ஒன்றிய அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா உள்ளிட்ட எழுத்து உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி, தேமுதிக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. சிவக்கொழுந்து மற்றும் கடலூர் அவைத்தலைவர் ராஜாராம் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்களுக்கு எழுத்து உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஏ.பி. ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் K. சுமோ சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S. செல்வராஜ், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் R.K. வேணுகோபால், ஒன்றிய பொருளாளர் S. ஜெயபிரகாஷ், கிளை கழக செயலாளர் அற்புதராஜ், சகாயராஜ், பின்டி, ஜார்ஜ், ஞானசேகர், பிரகாஷ், தெற்கு வழுதலம்பட்டு தெற்கு கிளை கழக செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஒன்றிய நிர்வாகிகள் நடராஜ், செல்வகுமார், பிரபாகரன், சத்யராஜ், வெங்கடேசன், S.K. வேல்முருகன், சமட்டிக்குப்பம் ஊராட்சி கழக செயலாளர் S.M. சேகர், அணுகம்பட்டு ஊராட்சி கழக செயலாளர் இளவரசன், அகரம் ஊராட்சி கழக செயலாளர் பிரபாகரன், புலியூர் ஊராட்சி கழக செயலாளர் தேவராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதேபோல், கிளை கழக செயலாளர்கள் உக்கிரமூர்த்தி, கோதண்டம், செந்தாமரை, சங்கர், கந்தன், சந்தானம், பழனி, விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad