குறை கடத்திகள் தயாரிப்பு தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

குறை கடத்திகள் தயாரிப்பு தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு


குறை கடத்திகள் தயாரிப்பு தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உள் தர உறுதிப்பிரிவு மற்றும் இயற்பியல் துறை, கணினி அறிவியல் துறை, கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் கணிதத்துறை ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த   குறை கடத்திகள் செயல்பாடுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தலைமை வகித்தார். கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார். உள் தர உறுதிப் பிரிவின்  உறுப்பினரும், தாவரவியல் துறை இணைப் பேராசிரியருமான முனைவர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மெய்யப்பன் சரோஜா அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினரும், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குறை கடத்திகள் தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த இயக்குநராகவும் இருக்கும்  முருகப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குறை கடத்திகள் தயாரிக்கும் முறையினை கூறி அதன் துவக்க நிலையில் இருந்து அவற்றின் பயன்பாடுகள் வரை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிய அவர் மேலும் குறை கடத்திகள் தயாரிப்புத் துறைகளில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பிற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் கூறினார். அமெரிக்கா, தாய்லாந்து, தைவான், தென்கொரியா  நாடுகளில் குறை கடத்தி தயாரிக்கும் முறைகளை பற்றியும் விளக்கிக் கூறியதோடு தற்போது இளநிலை,முதுநிலை கணினி அறிவியல்,இயற்பியல்,


வேதியியல் மற்றும் கணிதத்துறை பயிலும் மாணவர்கள் குறை கடத்திகள் தயாரிப்பில் எவ்வாறு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பதை பற்றியும் விளக்கி கூறினார் கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் திருமதி கவிதா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்களும் மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad