தேவகோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பரிசுகளை குவித்து வீரவிதை சிலம்ப அகாடமி மாணவர்கள் சாதனை.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சிவகங்கை மாவட்ட வீரவிதை சிலம்ப அகாடமி மாணவர்கள் மாஸ்டர் கலைவளர்மணி டாக்டர் திரு பெருமாள் அவர்களின் தலைமையில் பங்கேற்றனர்.
இதில் பாலாஜி, அபிலேஷ், ஷமிரா, விஷ்வந்த், ஹரிதர்ஷிணி, மோனிஷ் ஆகிய 6 மாணவர்கள் முதல் இடத்தையும், சாந்தனு, லத்திஸ், யுவஸ்ரீ, யுவபிரியா, ஹரிதாஸ்ரீ, ருத்திகாஸ்ரீ, ரிஷ்வந்த், வர்ஷினி, கபிலன், கிஷோர் ஆகிய 10 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், தனிஷ், ராஜ்குமார், யோகஸ்ரீகாந்திமதி, தியாஸ்ரீ ஆகிய 4 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்று அகாடமிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக