நீலகிரி பாலகொலா கிராம விஞ்ஞானிக்கு தமிழக அரசு பசுமை ஆர்வலர் விருது .
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பாலகொலா கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு. ஜனார்த்தனன்நஞ்சுண்டன் அவர்களுக்கு அண்மையில் உதகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தமிழக அரசின் கிரீன் சாம்பியன் அவார்டு எனப்படும் பசுமை ஆர்வலர் விருது மக்கள் விஞ்ஞானி திரு. ஜனார்த்தனன் நஞ்சுண்டன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார். இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானி திரு. நஞ்சுண்டன் அவர்கள் அமெரிக்காவில் செயல்படும் நாசாவின் 'மக்கள் விஞ்ஞானி' என்ற சிறப்பு தகுதி பெற்றுள்ளார். ஒவ்வொரு நாளும் உதகையில் தட்பவெட்பத்தில் ஏற்படும் மாறுதல்களை கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில், இரவு 7 மணி அளவில் உதகைக்கு நேரே வானில் வரும் நாசாவின் சேட்டிலைட்டுக்கு தகவல் அனுப்பி வைப்பார். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கணக்கிடும் விஞ்ஞானியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நேஷனல் ஜியோகிராபி என்ற என்ற அமைப்பின் கல்வியாளர் என்ற தகுதியும் பெற்றுள்ளார். இந்திய அரசு வழங்கும் காலநிலை சாம்பியன் என்ற தகுதியும் பெற்றுள்ளார். உலக அளவில் கவனிக்கப்படும்
யூ டியூபில் டெ ட் என்ற விஞ்ஞானிகள் பங்கேற்கும் உரை வரிசையில் இரு முறை உரையாற்றிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி மாணவ சமுதாயத்திற்கு பெரும் சேவை செய்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் திரு. கே. ஜே. ராஜு அவர்கள் அவரைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு ஒரு பொருத்தமான நபருக்கு விருது வழங்கிய கௌரவிப்பது பாராட்டுக்குரியது என்று கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக