ஆடி வெள்ளி கிழமையினை முன்னிட்டு குறிஞ்சிப்பாடியில் ஏழுந்தருளி இருக்கும் ஸ்ரீ புத்துமாரியம்மன் கோயிலில் மெய் உருகி வேண்டுதல் நிறைவேற்றி வழிபாடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

ஆடி வெள்ளி கிழமையினை முன்னிட்டு குறிஞ்சிப்பாடியில் ஏழுந்தருளி இருக்கும் ஸ்ரீ புத்துமாரியம்மன் கோயிலில் மெய் உருகி வேண்டுதல் நிறைவேற்றி வழிபாடு

ஆடி வெள்ளி கிழமையினை முன்னிட்டு குறிஞ்சிப்பாடியில் ஏழுந்தருளி இருக்கும் ஸ்ரீ புத்துமாரியம்மன் கோயிலில் மெய் உருகி வேண்டுதல் நிறைவேற்றி வழிபாடு மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ புத்துமாரியம்மன் திருகோயிலில் ஆடி மாத நான்காம் வெள்ளி கிழமையான இன்று செடல் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது

கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய செடல் பெருவிழாவில் இன்று குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே செடல் போட்டு கொண்டு  தங்களது வேண்டுதலை நிறைவேறறினர்

மேலும் செடல் பெருவிழாவில் பெண்கள் ஆண்கள் என திரளான பக்தர்கள் ஸ்ரீ புத்துமாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஓம் சக்தி பராசக்தி என மெய் உருகி வழிபாடு செய்து திருகோயிலை வலம் வந்தனர்.

இந்த செடல் பெருவிழாவிற்கு குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் மோகன் அய்யர் தலைமையில் போலிசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இதனை தொடர்ந்து நாளை காலை திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad