வீட்டை உடைத்த கரடி கரடியை கூண்டு வைத்து பிடிக்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

வீட்டை உடைத்த கரடி கரடியை கூண்டு வைத்து பிடிக்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை


வீட்டை உடைத்த கரடி கரடியை கூண்டு வைத்து பிடிக்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை         


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகாமையில் உள்ள இந்திராநகர் பகுதியில் கரடி ஊருக்குள் புகுந்து வீட்டை சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு பின்பு ஊர் பொது மக்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடியை கூண்டு வைத்து பிடித்து தருவதாக தெரிவித்துள்ளார்கள். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad