மானாமதுரை சிப்காட் மருத்துவ உயிரிக்கழிவு மறுசுழற்சி ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'மாபெரும் தர்ணா போராட்டம்'. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

மானாமதுரை சிப்காட் மருத்துவ உயிரிக்கழிவு மறுசுழற்சி ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'மாபெரும் தர்ணா போராட்டம்'.


மானாமதுரை சிப்காட் மருத்துவ உயிரிக்கழிவு மறுசுழற்சி ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'மாபெரும் தர்ணா போராட்டம்'.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் 'மெடிக்கேர் என்வெர்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் மருத்துவ உயிரிக்கழிவு மறுசுழற்சி ஆலையானது துவங்கப்படவுள்ள நிலையில், மண்ணுக்கு மனிதனுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுத்தி, மனிதன் வாழ தகுதியற்ற பகுதியாக மாறுவதை தடுத்திட வலியுறுத்தி ஏற்கனவே இக்குறிப்பிட்ட நாசக்கார ஆலையை மூட வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆகஸ்ட் ஏழாம் தேதி வியாழக்கிழமையன்று காலை சிப்காட் திட்ட அலுவலகம் முன்பாக "மாபெரும் தர்ணா" போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஆர். முனியராஜ் அவர்களின் தலைமையில் ஈடுபட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ச்சுனன், மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்கபூபதி, அய்யம்பாண்டி மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad