வட மாநில தொழிலாளர்களை என்எல்சி நிறுவனத்தில் பணியில் அமர்த்துவதை அடியோடு நிறுத்த வேண்டும் நெய்வேலியில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
கடலூர் மாவட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் மதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.பிச்சை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் அவர் பேசுகையில் என்எல்சியில் வீடு நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் நிரந்தர பணியாளர்களுக்கு சி ஆப் மற்றும் பிஹெச் ஊதியம் வழங்க வேண்டும்
வட மாநில தொழிலாளர்களை என்எல்சி நிறுவனத்தில் பணி அமர்த்துவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் தமிழ்நாடு இளைஞர்களுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் மைனிங் சூப்பர்வைசர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கூட்டத்தில் மதிமுக மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக