ஸ்ரீவைகுண்டம். ஆகஸ்ட் 8. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 9 வது ஆழ்வார்திருநகரி. ஊரில் மேல் பக்கம் அமைந்துள்ள சதுர்வேதி மங்கலம் என்ற இடத்தில் எம்பெருமானார் சன்னதியில் அவரது ஆச்சாரியன் ஆளவந்தார் சன்னதி அமைந்துள்ளது. ஆளவந்தார் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.
ஆழ்வார்திருநகரி ராமானுஜர் சன்னதியில் கடந்த 5 நாட்கள் தினசரி நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை நடந்தது. இன்று அவதார தினமான ஆடி உத்திராடம் நட்சத்திரத்தில் காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8.30 மணிக்கு திருமஞ்சனம். 9 மணிக்கு தீபாராதனை 10..30 மணிக்கு எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் துவங்க அவருடன் திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரியார்.
சுந்தர ராஜன். முத்தப்பன் பார்த்தசாரதி. ஸ்ரீதர். ராமகிருஷ்ணன். சீனிவாசன். அரவிந்தன். வாத்தியார் ரெங்கன். திருவேங்கடத்தான். தெய்லச்சிலை. ஆத்தான் பெரிய திருவடி. கிருஷ்ணன். பட்சிராஜன். பெரிய திருவடி. தெய்வச்சிலை. வீரராகவன் சேஷகிரி. பாலாஜி. பிச்சுமணி. ஆதிநாதன். கிருஷ்ணமூர்த்தி. அனந்த வெங்கடேசன். வேங்டகிருஷ்ணன். ஆதிநாதன். சுதர்சன். நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை செய்தனர்.
11.30 மணிக்கு ஆழ்வார் பிரசாதம் ஆளவந்தாருக்கு அர்ச்சகர் சீனிவாசன் அணிவித்தார். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிய முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. பிரசாத். ஆரியாஸ் விக்ரம் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக