ஏழு சமுதாய மயானம் கபளிகரம் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

ஏழு சமுதாய மயானம் கபளிகரம் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி கிராமத்தில் ஏழு சமுதாயங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்கள் அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட மயானம் ஒன்று பல ஆண்டுகளாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், பெரிய கண்ணாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனுசு என்பவர், “குளம் வெட்டுகிறேன்” என்ற பெயரில், பொதுமக்களுக்கு சொந்தமான மயானத்தை பாழ்படுத்தியதாக கிராம மக்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். புதிய குளம் வெட்டப்பட்டதால், உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லாமல், முன்பு புதைக்கப்பட்ட பிணங்களின் எலும்புகளை எடுத்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பிணங்களை புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.


மேலும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் “நல்ல தண்ணி குளம்” பகுதியில் செயற்கை குளம் வெட்டப்பட்டுள்ளதாகவும், இது கிராம மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மயானம் குறித்து அரசாங்கம் தலையிட்டு, சரியான அளவீடு செய்து உரிய இடத்தை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


“காலங்காலமாக இங்கு வாழும் ஏழு சமுதாயங்களும் அண்ணன்-தம்பி போல் ஒற்றுமையாக இருந்து வருகின்றோம். ஆனால் மயான விவகாரத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எடுத்த நடவடிக்கைகள், சமுதாய ஒற்றுமையைப் பிளக்கும் வகையில் உள்ளன” என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad