விழுப்புரத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அதிநவீன விரைவு பதில் குழு (Quick Response Team) ரோந்து வாகனத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த வாகனங்களில் நான்கு பக்க கேமராக்கள், ஒலிபெருக்கு சாதனங்கள், ஆடியோ-வீடியோ பதிவு வசதிகள் உள்ளிட்ட பல அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு முதல் நிலை காவலர்களுடன், துப்பாக்கி வசதியுடனான போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாகனங்கள் விழுப்புரம் மற்றும் கோட்டகுப்பம் உட்கோட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில், மேலும் குற்றங்கள் நடைபெறும் தருணத்திலேயே அவற்றைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த வாகனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் போலீசார் செயல்பட உள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக விழுப்புரம் மாவட்ட செய்தியாளர். அருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக