அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியை நிர்ணயிக்கும் உச்சநீதிமன்றம் தனியார் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிர்ணயித்துள்ளது என நெல்லையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது இதனை ஒட்டி நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலைக்கு அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாட்டிற்காக தியாகம் செய்த வ உ சிதம்பரனாரின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது அவர்களே வரியை எட்டு ஆண்டுகளாக கூட்டி வைத்து இப்போது குறைத்துள்ளனர். மக்களை கசக்கி பிழிந்து வரியை பிரித்தனர் அதனை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
இப்போது வரியை குறைத்ததாக விளம்பரம் செய்கிறார்கள் வரி குறைப்பால் மாநில அரசிற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்குமா என்பது தெரியவில்லை. எதை செய்தாலும் மத்திய அரசுக்கு தான் நன்மை கிடைக்கும். இது மக்களுக்கும் மாநில அரசுக்கும் நன்மையான காரியம் கிடையாது.
நீட் தேர்வை போன்று கொடூரமாகண தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வு. அரசு அரசு உதவி பெறும் பள்ளிக்கு தான் இந்த தேர்வு முறை என சொல்கிறார்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என ஒன்றும் இதுவரை சொல்லவில்லை.
ஆசிரியர்கள் சான்று பெற்றுள்ளார்கள் அவருக்கு இது போன்ற தேர்வு முறை அவசியமே கிடையாது கல்விக் கொள்கைகள் மாநில அரசிடம் இருந்தால் மட்டுமே இது போன்ற விஷயங்களை சரி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக