அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பேச வேண்டும் தேவைப்பட்டால் நான் பேசுகிறேன்.
திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் அனைவரும் வரவேண்டும் வருவார்கள் என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வ உ சி யின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ளது.கடைசி ஒரு மாதத்தில் கூட அதிகமான மாற்றங்கள் வரும்.ஆட்சி மாற்றம் வரும் நிச்சயமாக நல்லது நடக்கும்.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல விஷயம். அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பேச வேண்டும் தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுகிறேன்.
ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுக இணைய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறேன். திமுகவை தவிர்த்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் அனைவரும் வரவேண்டும், வருவார்கள் என தெரிவித்தார்.
செய்தி - மாடசாமி திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக