சிவகங்கை மாவட்டத்தில் 2ஆம் தேதி 'உங்களுடைய ஸ்டாலின்' திட்ட முகா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

சிவகங்கை மாவட்டத்தில் 2ஆம் தேதி 'உங்களுடைய ஸ்டாலின்' திட்ட முகா

 


சிவகங்கை மாவட்டத்தில் 2ஆம் தேதி 'உங்களுடைய ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெறும் பகுதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல். 


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


அதன்படி காரைக்குடி சங்கராபுரம் சமுதாயக்கூடம், தேவகோட்டையில் உள்ள எஸ். எம். மஹால், நற்குப்பை பேரூராட்சி ராம சா. மடம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் அல்லிநகரம் மணி ராஜம்மாள் மஹாலில் அல்லிநகரம், கலியாந்தூர், நைனார்பேட்டை, டி. புளியங்குளம், மேலராங்கியம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் புறநகர் ஊராட்சி பகுதி வாணியங்குடி எம். எஸ். மஹால், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சூராணத்தில் உள்ள கே. கே. மஹாலில் சூராணம், ஆக்கவயல், கல்லடித்திடல், விரையாதகண்டன், துகாவூர், உதயனூர் உள்ளடங்கிய பகுதிகளில் இம்முகாமானது நடைபெற உள்ளது. மேலும் நடைபெற உள்ள இந்த முகாமை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி பயன்பெறுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad