தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாலாஜா தாலுகா 21 வது மாநாடு பல்வேறு தீர் மானம் மற்றும் போராட்டம் நடத்த முடிவு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாலாஜா தாலுகா 21 வது மாநாடு பல்வேறு தீர் மானம் மற்றும் போராட்டம் நடத்த முடிவு!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாலாஜா தாலுகா 21 வது  மாநாடு பல்வேறு  தீர் மானம் மற்றும் போராட்டம் நடத்த முடிவு!
ராணிப்பேட்டை , செப் 01 -

சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை விழிப்புடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க தாலுகா மாநாட்டில் தீர்மானம்!

ராணிப்பேட்டை மாவட்டம்   வாலாஜா தாலுக்கா ஏனைய மாவட் டங்களில்போல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாலாஜா தாலுகா 21வது மாநாடு தாலுகா தலைவர் கே. ஏழு மலை தலைமையில் இரத்தினகிரியில் நடைபெற்றது  இந்த மாநாட்டில் தாலுகா குழு உறுப்பினர் எச். பிரவீன்ராஜ் வரவே ற்று பேசினார். தாலுகா குழு உறுப்பினர் கள் கே. உமாபதி அஞ்சலி, செயலாளர் எம். ரமேஷ் வேலை அறிக்கை முன்வைத் தனர். விவசாய சங்க மாநில பொருளா ளர் சி. பெருமாள் துவக்கி வைத்து பேசி னார். முன்னதாக து. தலைவர் எம். தன பால் சங்க கொடியை ஏற்றி வைத்தார் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன், வி.ச மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, செயலாளர் எல்சி. மணி, பொ ருளாளர் சி. ராதாகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே. ஜெயசங்கர், சீனி. ஜெகநாதன், ஆற்காடு தலைவர் ஏ.எம். சம்பத்பிள்ளை, செயலாளர் ஆர். மோகன் ராஜ், பொருளாளர் எ. குமார், சி. தாமோதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினா ர்கள். மாநாடு நிறைவு செய்து மாநிலகுழு உறுப்பினர் மாவட்ட செயலாளர் எல்சி. மணி பேசினார். இறுதியாக தாலுகா குழு உறுப்பினர் இ. மணிமாறன் நன்றி கூறி முடித்து வைத்தார்.புதிய நிர்வாகிகள்
தலைவராக கே. ஏழுமலை, செயலாளர் பி. சேகர், பொருளாளராக கே. உமாபதி உள்ளிட்ட 13 பேர் கொண்ட வாலாஜா தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்; இராணிப்பேட்டை சிப்காட் டிசிசி கொட்டப்பட்டுள்ள 2.25 டன் அபாயக ரமான குரோமிய கழிவுகளை அகற்ற வே ண்டும். நவ்லாக் பகுதியில் அரசு வேளா ண் கல்லூரி அமைக்க வேண்டும். வாலாஜா தாலுகா கீழ்மின்னல் சர்வே எண் 145 ல் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் 108 வீடுகளு க்கு சிறப்பு திட்டத்தின் கீழ் விரைந்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் தொழி ற்சாலைகளை விழிப்புடன் கண்காணி த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களை போல இராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். காஞ்சனகிரி மலை யை ஏலகிரி மலை போல சுற்றுலா தளம் ஆக்கி அரசு கோடை விழா நடத்த வேண் டும். புதுப்பாடி அணை புனரமைப்பு பணி களை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். தோல் ரசாயன கழிவுகளால் பாலாறு நிலம் நீர் காற்று மாசடைவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad