இந்த முகாமை, தூத்துக்குடி தெற்கு மாவட்டதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ராஜா ஸ்டாலின் தலைமை தாங்கியும், சமூக ஆர்வலர் நோவா கோவில்பிள்ளை முன்னிலை வகித்தும் துவக்கி வைத்தனர். இம்முகாமில் சிகிச்சைக்காக வந்திருந்த 98 நபர்களில், 26 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
மேலும், அறுவை சிகிச்சைக்காக 9 பேர் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், 15 பேர் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஸ்காட் நிர்மான் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் வளர்ச்சி அலுவலர் பரமசிவன் குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக