குடியாத்தம் ஒன்றியம் மேலாளத்தூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி திறப்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 செப்டம்பர், 2025

குடியாத்தம் ஒன்றியம் மேலாளத்தூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி திறப்பு விழா!

குடியாத்தம் ஒன்றியம் மேலாளத்தூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி திறப்பு விழா!
குடியாத்தம், செப் 24 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேலாளத் தூர் ஊராட்சியில் 14 லட்சம் ரூபாயில் அங்கன்வாடி கட்டிடம் இன்று திறப்பு விழா நடைபெற்றது தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பிரதம மந்திரி கிராம முன்னேற் றம் மற்றும் ஆதி திராவிடர் நல திட்டம் 2022 ஆம் நிதி ஆண்டில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ரூபாய் 14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது அதன்படி அங்கன்வாடி கட்டிடம் மையம் கட்டி முடிக்கப்பட்டது இதன் திறப்பு விழா  நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாள ராக ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி னார் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ராஜ்குமார் தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் , மாவட்ட கவுன்சிலர் ஆனந்தி  முருகானந்தம் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் வரவேற்றார்
 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹானா நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் நிகழ்ச்சி இறுதியில் ஊராட்சி செயலாளர் மோகன் நன்றி தெரிவித்தார்.

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad