மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்! அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்! அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்.

மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்! அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்.
 
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த குலசேகரன்புதூர் கிராமத்திற்கு செல்லும் சாலைப் பகுதியில் காற்றினால் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி இப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார் வந்ததைத் தொடர்ந்து மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காண பல வழிமுறைகள் இருந்தும் அப்பகுதி இளநிலை பொறியாளர் வழிமுறைகளை பின்பற்றாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மின் வாரிய ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் காற்றினால் ஏற்படும் உராய்வை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்கிறதான ஆலோசனை வழங்காமல் ஊழியர்கள் பணி செய்யும்போது இப்பகுதிகளை பார்வையிடாமல் விட்டதின் விளைவு பேசு பொருளாக மாறி உள்ளது.

மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் இருக்க பிளாஸ்டிக் பைப்புகளை உபயோகிப்பது வழக்கம். ஆனால் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் மண் நிரப்பி இரு பாட்டில்களை இணைத்து கயிறுகளால் கட்டி மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசாதபடி நூதன முறையில் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பது வியத்தகு செயலாக பார்க்கப்படுகிறது.
 இது ஒரு இடத்தில் மட்டுமல்ல அப்பகுதிகளில் பல இடங்களில் இவ்வாறு தொங்க விடப்பட்டுள்ளது 

நிரந்தர தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இதனை கண்காணிக்க வேண்டிய இளநிலை பொறியாளரின் அஜாக்கிரதையால் மின்சார வாரியத்திற்கும் தமிழக அரசிற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது 

இச்செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அரசு துரை ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசுக்கும் மின்சார வாரியத்திற்கு இவர்களால் ஏற்பட்ட களங்கம் துடைக்கப்படும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad