மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விபத்தால் பாதியில் முடிந்த சபாநாயகர் செய்தியாளர் சந்திப்பு
நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பாளையங்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் நடந்து வரும் குடிநீர் திட்டப் பணிகளின் நிலை தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆட்சியர் உள்ளிட்டோருடன் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ராதாபுரம் நாங்குநேரி உள்ளிட்ட ஒன்றியங்களில் 831 கிராமங்களில் 605 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா காணப்பட உள்ளது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 17 லட்சமாக உயர்ந்துள்ளது. பெரிய தொழில்கள் வந்தால் தான் அதனை நம்பி சிறு குறு தொழில்கள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது திடீரென தறிகட்டு ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது, கார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் மீது மோதி மணல் மேட்டில் சிக்கி நின்றது இதனால் சபாநாயகர் செய்தியாளர் சந்திப்பு பாதியில் நின்று போனது.
செய்தி - திருநெல்வேலி மாடசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக