தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் சான்றோர் மக்கள் கழகத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெய் முருகேஷ் தலைமையேற்றார். மாநில தலைவர் பூமிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகன் நாடார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் சதா நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில்,
-
பெருந்தலைவர் காமராஜருக்கு திருவுருவச் சிலை மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
-
வரும் செப்டம்பர் 21ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்; அதற்காக தேனி மாவட்டத்திலிருந்து பெருமளவில் வாகனங்களில் சென்று பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
-
தேனி அல்லிநகரம் நகராட்சி கெஜட்டில் காந்திஜி சாலை, நேருஜி சாலை என பெயரிடப்பட்ட சாலைகளுடன் கம்பம் சாலையும் தேசியத் தலைவரின் பெயருடன் இடம்பெற வேண்டும்; அதற்காக கம்பம் சாலை ‘பெருந்தலைவர் காமராஜர் சாலை’ என பெயரிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
-
தேனி மாவட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
-
மேலும், தேனி காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆயிர அமைப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக