நெல்லை பாளையங்கோட்டையில் மதநல்லிணக்கம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தி பன்னாட்டு மதசுதந்திர கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
வேற்றுமையில் ஒற்றுமை , இந்தியாவின் சமய நல்லிணக்க பாரம்பரியத்தை கொண்டாடுதல் என்ற தலைப்பில் பன்னாட்டு மதசுதந்திர கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாநாடு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மதநல்லிணக்கம் மற்றும் சமூகநீதியை வலியுறுத்தி மாபெரும் பேரணி நடைபெற்றது. பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்த பேரணியை நெல்லை மத்திய மாவட்ட வர்த்தகரணி தலைவர் மைக்கேல்ராஜேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி திருவனந்தபுரம் சாலை, எல்.ஐ.சி , செல்வவிநாயகர் கோவில் சாலை வழியாக சென்று நூற்றாண்டு மண்டபத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் சென்றவர்கள் மத நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தி பதாதைகள் ஏந்திச் சென்றனர். இந்த பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாநாடு தொடங்கி நடைபெற்றது. இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், கருத்தாளர் மதிவதனி, கூட்டமைப்பு தலைவர் ரெங்கபாஸ்யம் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக