உலக ரெட்கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனான்ட் 115வது நினைவு தினம் முன்னிட்டு முதியோர்க்கு அரிசி, காய்கறி வழங்கல்!
காட்பாடி , அக் 31 -
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் இயக்கத்தின் தந்தை ஜீன் ஹென்றி டூனட் அவர்களின் 115வது நினைவு நாள் முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மேலாண்மைக்குழு கூட்டத்தில் அன்னாரின் திருவுருவ படத் திற்கு மரியாதை செலுத்தி மளிகை பொருட்களை வழங்கினர். காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங் கினார். மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின் வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.சீனிவாசன் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்று பேசினார்.
அவை துணைத்தலைவர் ஆர்.விஜய குமாரி, பொருளாளர் வி.பழனி அகியோர் முன்னிலை வகித்து பேசினர். மேலாண் மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வி.தீனபந்து, பி.என்.ராமச்சந்திரன், டி.லிவிங்ஸ்டன் மோசஸ், கஜேந்திரன், சுதாகர், ஜி.செல்வம், டி.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்று அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் முதியோர்களக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பேசிய அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவத. ஜீன் ஹென்றி டூனான்ட் (Jean Henri Dunant), அக்டோபர் 30, 1910ல் மறைந்தார். இவர் தான் ரெட்கிராஸ் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸர்லாந்து நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர் களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத் தைத் தொடங்கினார்.
1901 இல் அமைதிக் கான முதல் நோபல் பரிசை பிரடெரிக் பாசியுடன் பகிர்ந்து பெற்றார். போரில் துன்பப்படும் காயப் படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப் பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க வேண்டும் என அவர் எடுத்த முன்னெடு ப்பு தான் ரெட்கிராஸ் சங்கம், தன் ஒட்டுமொத்த வருமானத் தையும் போட்டு அதை நடத்தினார் பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் இந்நாளில் அவரின் கனவை நனவாக்க காட்பாடி வட்ட ரெட்கி ராஸ் சார்பில் அவரின் திருவுருவபடத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. மேலும் இப் பகுதியை சார்ந்த முதியோர்களக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியுள்ளோம் என்றார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக