குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் காட்டாதுறை ஊராட்சிக்கு உட்பட்ட சாமியார்மடம் ஊரக தினசரி சந்தை அருகே காமராஜர் பெயரில் படிப்பகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் எம். பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20- லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக