850 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சுந்தரவீரர் ஆஞ்சநேய சுவாமி திருக் கோவில் விமான ஜீரணோதாரண மஹா சம்ப்ரோக்ஷண விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 அக்டோபர், 2025

850 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சுந்தரவீரர் ஆஞ்சநேய சுவாமி திருக் கோவில் விமான ஜீரணோதாரண மஹா சம்ப்ரோக்ஷண விழா !

 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சுந்தரவீரர் ஆஞ்சநேய சுவாமி திருக் கோவில் விமான ஜீரணோதாரண மஹா சம்ப்ரோக்ஷண விழா !
திருப்பத்தூர்,  அக் ‌27 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீதாலட் சுமண அனுமந் சமேத ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி உடனே ஸ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு புது பொலிவுடன் திகழ்கின்றது. சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்தது திருக் கோவில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது புதுப்பிக்கப்பட்டு நேற்று, இன்று, நாளை, உள்ளிட்ட நாட்களில்  விமான ஜீரணோதரண மகா
சம்ப்ரோக்ஷண விழா நடைபெற உள்ளது. 
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மங்கல இசை, இரண்டாம் கால ஹோமம், கும்ப ஆராதனம், தீர்த்த பிரசாதம் விநியோகம், தத்வந்யாச ஹோமம்,  மற்றும் கோவிலுக்கு நிதி உதவி வழங்கிய நபர்களுக்கு சங்கல்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
மேலும் நாளை திருக்கல்யாண உற்சவம் திருவிதி புறப்பாடு கோவில் விமானத் திற்கு புனித நீர் ஊற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு இறுதியில் அன்னதானமும் வழங்கப் பட்டது..

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad