தலைமை நீதிபதி மீதான தாக்குதல் - இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் - இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்!

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் -  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்!

வேலூர் ,அக் 6 -

வேலூர் மாவட்டம் இந்தியப் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் இந்திய தலைமை நீதிபதி நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதல் முயற்சியை கண்டிக்கின்றோம் மேலும் நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற வழக்கறிஞரை உடனடியாகக் கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) கோருகிறது. இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் அகில இந்திய பொதுச் செய லாளர் சாவாரவி, செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவர் ச.மயில், செயலாளர் அ.மாயவன் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது.சாதி அடிப்படை யிலான ஆணவம் மற்றும் மத சகிப்பின் மையின் ஒரு தொந்தரவான எழுச்சியை நாடு தற்போது எதிர்கொள்கிறது. அரசிய லமைப்பு, ஜனநாயகம் மற்றும் நீதித் துறையை முற்றிலும் அவமதிக்கும் சக்திகள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சக்திகளைக் கட்டுப்படுத்தும் பணியில் உள்ளவர்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களை ஊக்கு விப்பது போல் தெரிகிறது. நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற வழக்கறி ஞரை உடனடியாகக் கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) கோருகிறது. இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், திங்கட்கிழ மை நீதிமன்ற அறைக்குள் ஒரு வழக்க றிஞரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை  கண்டிக்கின்றோம் என தெரிவித்தனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad