தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத மாநகரை உருவாக்குவோம் என்று மேயரின் உறுதிமொழி.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு பேரில் மாநகராட்சி சுதாகர் அலுவலர் தலைமையில் பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அற்ற மாநகரை உருவாக்குவோம் என மேயர் உறுதிமொழி அளித்துள்ளார். இதனை செயல்படுத்த, உள்ளூர் அரசியல் கட்சிகள், வர்த்தக சமூகம், பல்வேறு அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக சேவகர்களின் ஒத்துழைப்புடன், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேயரின் உறுதிமொழி பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதித்து, பிளாஸ்டிக் இல்லாத நகரை உருவாக்குவது. இதில்
அரசியல் கட்சிகள், வணிகர்கள்,அமைப்புகள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்களின் ஒத்துழைப்பை பெறுதல்.
சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உதாரணமாக, அபராதம் விதிப்பது மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோரிக்கை அளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக