குடியாத்தத்தில் தப்பால் ஊழியரை கை , கால் கட்டி வாயில் மது ஊற்றி சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை!
குடியாத்தம் ,அக் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா செதுக்கரை பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணி செய்து வருபவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் லோகேஷ் (வயது 21) வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா செதுக்கரை பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணி செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் என்பவருக்கு , பதிவு அஞ்சல் வந்துள்ளது.அஞ்சல் கவரை , தபால் ஊழியர் லோகேஷ் , அஜய்குமார் கொடுக்கச் சென்றுள்ளார் அப்போது பதிவு அஞ்சல் தபால் கடிதத்தில் கையொப்பம் பெற்றுள்ளார்.இதில் கையொப்பம் வேறுபாடு உள்ளதாக லோகேஷ் , அஜய்குமாரிடம் தெரிவித்து ள்ளார்.இதனால் தபால் கொடுக்க மறுத்துள்ளனர்.இதனால் இருவருக்கும் வாய் தகறாரு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த அஜய்குமார் தபால் ஊழியர் லோகேஷ்யை கை கால்களை கயிறு மூலம் கட்டி , அவரது வாயில் மது ஊற்றி சரமாரியாக தாக்கியுள்ளார்.
மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் தபால்களை பிடுங்கி உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சக தபால் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு
தகவல் தெரிவித்தனர்.அதன்படிபோலீஸ் சார் சம்பவ இடத்திற்கு சென்று தபால் ஊழியர் லோகேஷ் மீட்டு இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படுகாயம் அடைந்த லோகேஷ் குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் இதனால் குடியாத்தம் தபால் ஊழியர் வட்டாரத்தில் பரபரப்பாக காணப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக