மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பின்புறம் நுழைவாயில் பூட்டி வைப்பதால் பள்ளி மாணவர்கள் அவதி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 அக்டோபர், 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பின்புறம் நுழைவாயில் பூட்டி வைப்பதால் பள்ளி மாணவர்கள் அவதி !

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பின்புறம் நுழைவாயில் பூட்டி வைப்பதால் பள்ளி மாணவர்கள் அவதி !
திருப்பத்தூர் , அக் 8 -

மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? என பொதுமக்கள் கேள்வி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மூன்று நுழைவாயில் உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகாமையில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் இருப்பதால் பள்ளிக்கு செல் லும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பின்புறம் மற்றும் முன்புறம் நுழைவாயில் வழியாக விரைந்து செல்வதற்கு ஏதுவாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் ஒரு தனிநபர் கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு உலா வரும் அந்த சார் இது பொது வழி அல்ல என்று ஸ்டிக்கரை உடனடியாக ஒட்டியுள்ளார். தனிநபர் ஒருவர் மாவட்ட நிர்வாகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளன அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த கேட்டுக்கு பூட்டு போடு என சொல்லி இருப்பது பெரும் தவறு எனவே மாவட்ட நிர்வாகத்தை கண்டிக் கும் வகையில் உடனடியாக பின்புற கேட்டை திறக்காவிட்டால் தமிழக முதல் வருக்கு பொதுமக்கள் சார்பாக மனு அளிக்க உள்ளதாக தகவல் தகவல் எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்தத் தனி நபருக்காக அந்த வலியை மூட வேண்டாம் எனவும் பள்ளி மாணவர் களுக்காகவும் மக்களுக்காகவும் அந்த கேட்டை திறந்து விட வேண்டும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை மிகவும் பணிவுடன் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது மக்களுக் காக தான் மாவட்ட நிர்வாகமே தவிர நிர்வாகத்திற்கு மக்கள் கிடையாது என்று நினைத்து இதனை நினைவில் கொள்ள வேண்டும் தனிநபர் ஒருவருக்காக மாவட்ட நிர்வாகம் கிடையாது. பல நாட் களாக அந்த வலியை மக்களும் மற்றும் பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வந்ததை நினைவில் கொள்ள வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் நல்லதம்பி மாவட்ட ஆட்சியர்  நுழைவாயில்  வழியாக குழந்தைகள் செல்வதற்காக  வழி விடப்பட்டது என்று அறிவித்தார். பள்ளிக் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் இப்பொழுது பள்ளி குழந்தைகள் மட்டும் பொதுமக்கள் அவ்வளியை பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென்று ஒரு நாள்  பூட்டு போட்டுவிட்டு இது பொது வழி அல்ல என்று அறிவிப்பு தவறு தனிநபர் ஒருவருக்காக இந்த செயலை செய்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக் கை எடுத்து அந்த பின்புற கேட்டை திறக்க வேண்டும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர். இந்தத் தொகுதி பொறுப்பு அமைச்சர் ஐயா ஏவா வேலு அவர்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும்  பொதுமக்கள் சார்பாக 
இந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புற நுழைவாயில் பூட்டி வைக்கப்படுவதால் அவ்வழியாக செல்லகூடிய பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்ற னர். இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா என பொதுமக்கள் பள்ளி குழந்தைகள்?. கேள்வி எழுப்பி வருகின்ற னர். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ ர்கள் ஏதாவது கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad