தேசிய ஊதிய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு 20% புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வூதியம் என 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்
நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவிப்பு.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்கள், கணினி இயக்குபவர்கள் உள்ளிட்டோரின் 25 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக தேசிய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்கள் சம்பளத்தின் மீது 20 சதவீத ஊதிய உயர்வு அனைவருக்கும் நிபந்தனை இன்றி வழங்கப்பட வேண்டும்.
புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக ஆணை சமர்ப்பிக்கப்பட்டு ஒன்றை வருடங்கள் ஆகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது அது சில ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அது மீண்டும் வழங்கப்பட வேண்டும்.
ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற 25 அம்ச கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனு, தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை எங்கள் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே நாளை முதல் நெல்லை மாவட்டத்தில் உள்ள 63 சங்கங்கள்ள்ளு அனைத்து கூட்டுறவு சங்கங்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக