உலகம் போற்றும் மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் தேதி அன்று நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொள்ளப்பட்டார்இந்த நாள் இந்திய வரலாற்றில் கருப்பு நாளாக அமைந்தது இப்படி சுட்டுக் கொல்லப்பட்ட தேச தந்தை மகாத்மா காந்தி அடிகள் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதியில் காந்தி ஜெயந்தி விழாவாக இந்திய தேசம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகரில் அமைந்துள்ள சர்வோதய சங்க வளாகத்தில் காந்தியடிகளின் அஸ்தி வைத்து நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது இங்கு பொதுமக்கள் திரளாக வந்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள் இந்த வகையில்
திருப்பூர் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளரும் கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் திருப்பூர் மாநகர 14 வது வார்டு செயலாளருமான மு. ரத்தினசாமி அவர்கள் தன் குடும்பத்துடன் திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி அவர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார் மேலும் தனது தோட்டத்தில் மகாத்மா காந்தியடிகள் அவர்கள் நினைவாக மா மரக்கன்று நடவு செய்தார் இந்த நிகழ்வில் உடன் ராகவா லாரன்ஸ் நற்பணி மன்ற திருப்பூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கருணை உள்ளம் V. சுந்தரம் உடனிருந்தார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக