மின் கம்பிகள் உரசி தீப்பொறி பறந்தது அறப்போர் இயக்கம் புகார் உடனடியாக சரி செய்த மின்வாரியம் திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் அனுப்பர்பாளையம் மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதி அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் ரோடு இந்த பகுதியில் ஒரு கம்பத்தில் இருந்து மற்றொரு கம்பத்திற்கு செல்லும் மின் கம்பிகள் திடீரென வேகத்துடன் வீசிய காற்றின் காரணமாக ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறந்தது இதை நேரில் பார்த்த அறப்போர் இயக்க வாலண்டியர் காஜாமைதீன் உடனடியாக மின்வாரியத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்தார் இந்த புகாரை ஏற்று கொண்ட மின்வாரியம் மின்வாரிய ஊழியர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி உடனடியாக அருகருகே நெருக்கமாக இருந்த மின்சார கம்பிகளில் பிளாஸ்டி பைப்புகளை கட்டி பாதுகாப்பு செய்தனர் இந்த புகாரை சரி செய்த மின்சார ஊழியர்கள் உடனடியாக அறப்போர் வாலன்டரியர் காஜாமைதீனுக்கு தகவல் தெரிவித்தனர் அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சரி செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டார் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக