வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருட் கள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருட் கள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை !

வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருட் கள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை !
வேலூர் , அக் 31 -

வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருட் கள் கடத்தலில் ஈடுபட்டு காவல்துறை யினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங் களை வேலூர் சரக காவல் துறை துணை த்தலைவர் முனைவர். G.தர்மராஜன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.மயில்வாகனன், இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.பாஸ்கரன் (தலைமையிடம்) அவர்களின் தலைமை யில் நேற்று 30.10.2025-ம் தேதி வேலூர் மாவட்டம் நேதாஜி ஸ்டேடியம், ஆயுதப் படை கவாத்து மைதானத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப் பட்டது. இதில் 16 இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு ரூபாய். 4,77,904/- ஆகும் என்பதை வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவித்தனர் .

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad