நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா!
குடியாத்தம் , அக் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம், நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கான 7 நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா இன்று ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி தலை மையில் நடைபெற்றதுகுடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு முகாமின் சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளை யும் வழங்கி சிறப்புரையாற்றினார்
முன்னதாக என் எஸ் எஸ் திட்ட அலுவலர் ஆர். ஜெயகுமார் அனைவரையும் வரவேற்றார். மேலும் நிகழ்ச்சியில் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், ரோட்டரி சங்க தலைவர் கே.சந்திரன் செயலாளர் கே.சுரேஷ் பொருளாளர் என்.ஜெயச் சந்திரன் உதவி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், முதுகலை பொருளியல் ஆசிரியர் கருணாகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி எ.தயாநிதி பட்டதாரி ஆசிரியர் சங்கர் பள்ளி மேலா ண்மைக்குழு தலைவி எம்.கோவிந்தம் மாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கள் பி.தீபிகா பாரத் யு.அமுதாலிங்கம் உலக திருவள்ளுவர் பேரவையின் தலைவர் திரு ஆர்.அன்பு ஊர் நாட்டாமை பெரியதனம் ஊர் பெரியவர்கள் பாபு லிங்கம், ரமேஷ், ஜலபதி வெங்கடேசன் சீவூர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நிகழ்ச்சிக்கு முன்னிலை. வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சீவூர் ஊர் பொதுமக்கள், மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இறுதியில் உதவி திட்ட அலுவலர் அரி கிருஷ்ணன் அவர்கள் முகாம் அறிக்கை யை வாசித்து நன்றியுரை ஆற்றினார்.
இம்முகாமில் மரம் நடுதல் போதை விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி வளாக தூய்மை பணி செய்தல் பிளாஸ்டிக் மற்றும் போதை விழிப்புணர்வு சாதனை மாணவர்கள் பல் மருத்துவம் கால்நடை மருத்துவம் நலம் தரும் மருத்துவம் நூற்றாண்டு வாழ சித்த மருத்துவம் இலவச காய்கறி செடிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்குதல் கால்நடை களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல் இன்றைய மாணவ சமுதாயத்தை ஊடகங்கள் நல்வழிப்படுத்துகிறதா சீரழிகிறதா என்ற பட்டிமன்றம் சிரிப்பு யோகா சிக்கனமும் சிறுசேமிப்பும் புத்தகம் பேசுது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. முகாம் இனிதே நிறைவு பெற்றது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக