கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் பறக்கும் படை மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பெருமளவு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குளச்சல் அருகே இன்று (12ம் தேதி) அதிகாலை நடைபெற்ற சோதனையில், கேரளா பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரில் சுமார் 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதேபோல், குளச்சல் வாட்டர் டாங்க் அருகே சோதனைக்குட்பட்ட மற்றொரு காரில் 500 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசிகள் கோணம் அரசு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், கடத்தல் வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
இச்சோதனையை பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக