கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஏரி ரூ.36.59 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப் பட்டு சுற்றுலா தளம் இன்று திறப்பு!
காட்பாடி , நவ 17 -
வேலூர் மாவட்டம் காட்பாடி இன்று (17.11.2025), காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஏரி ரூ.36.59 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப் பட்டு சுற்றுலா தளமாக்கி மக்கள் பயன் பாட்டிற்கு அர்ப்பணித்தல், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 இடங் களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பாதுகாப்பு கட்டமைப்புகள், கழிஞ்சூர் ஏரியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் உபரி கால்வாய் மத்தியில் தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான துரை முருகன் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் கழக வேலூர் வடக்கு பொறுப்பாளர் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுல் விஜயன் மற்றும் நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் சுனில் குமார் பகுதி செயலாளர் வன்னியராஜா காட்பாடி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா பெருங்குழு தலைவர் வேல்முருகன் மாமன்ற உறுப்பினர்கள் டீட்டா சரவணன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக