திருப்பூரில் தவெக சார்பில் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் கோபால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நக்கீரன் வாசகர் சிவசங்கர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு
திருப்பூர் மாநகரில் 16/11/2025 அன்று குமரன் சிலை முன்பு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்பாட்டத்தில் நக்கீரன் கோபால் அவர்களை தவறாக விமர்சித்துள்ளார்
தாராபுரம் சேர்ந்த சுஜித் குமார் என்ற நபர் பேசியுள்ளார் அதை நான் அவரின் முகநூல் பக்கத்தில் பார்த்தேன் அதில் அவர் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டுல மீசை வச்சுட்டு ஒருத்தன் சுத்திட்டு இருக்கான் நக்கிரன் கோபால் தொடர்ந்து தளபதி விஜய்க்கு எதிராக பேசினால் தமிழ்நாட்டில் வெளியில் நடமாட முடியாது வெளியே வரும்போது பார்த்து வா ராஜா நாங்க எல்லாம்
ரொம்ப உணர்ச்சிவசப்பட்டவங்க ஜனநாயக முறைப்படி எல்லாம் சென்றது அந்த காலம் தளபதி தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று கூறி ஊடகத்தின் பெயரிலே பத்திரிக்கையின் பெயரிலே ரெட்லைட் பத்திரிக்கை நடத்துவதாகவும் நக்கீரன் கோபால் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி இன்றோடு நிறுத்திக் கொள் இல்லையென்றால் நீ அடக்கப்படுவாய் தமிழ்நாட்டின் நடமாட முடியாது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீ தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்று கொலை மிரட்டல் விடும் தோனியில் பேசியுள்ளார் இவரின் பேச்சால் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களின் உயிருக்கு மிகவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது மற்றும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் இவரின் பேச்சு வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் ஆசிரியர் கோபால் அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் கொடுத்த சுஜித்குமார் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக