தூத்துக்குடி மாநகராட்சி, ஜே.எஸ் நகர் தொடக்கப்பள்ளியில் கூடுதலாக புதிய மூன்று வகுப்பறைகள் கட்டிடம், மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் ஆகிய கட்டிடங்களை இன்று (07.11.2025) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் 55வது வார்டு ஜே.எஸ் நகரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநில நிதி ஆணையம் (SFC) பள்ளி மேம்பாட்டு மானிய உள்கட்டமைப்பு பணிகள் நிதியில் ரூ. 55 இலட்சம் மதிப்பீட்டில் 967 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் மற்றும்
அதேப் பகுதியில் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து வ.உசிதம்பரனார் துறைமுக சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியின் (CSR) பங்களிப்பில் ரூ. 2.38 கோடி மதிப்பீட்டில் 8978 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களுடன் கூடிய மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் ஆகிய கட்டிடங்களை தூத்துக்குடி பாராளுமன்ற கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்கள். உறுப்பினர்
இந்த மது மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் முக்கிய நோக்கமாக, மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான நபர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை மற்றும் மறு சீரமைப்பு வழங்குவது ஆகும். இதன் மூலம் அவர்கள் மீண்டும் சமூகத்தில் சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கு உதவும்.
இந்த மையத்தின் சிறப்பம்சங்களாக 40 படுக்கைகள் கொண்ட மருத்துவப்பயனாளி வார்டு, மருத்துவர் அறை மற்றும் சிகிச்சை அறை, ஆய்வகம், ஆலோசனை அரங்கம், வெளி மருத்துவப் பயனாளிகள் அறை, வரவேற்பு அறை, உளவியல் அறை, கழிவறைகள், ஆவண அறை, சமையலறை, உணவுக்கூடம், பொருட்களைச் சேமித்து வைக்கும் இடம், காத்திருப்பு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மேயர் பெ.ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, துணை மேயர் செ.ஜெனிட்டா, தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின். நிறுவனர் எம்.எஸ் செல்லமுத்து அறக்கட்டளை, மூத்த மனநல மருத்துவர் மரு. செ.ராமசுப்பிரமணியன், மாநகர் நல அலுவலர் க.சரோஜா, மண்டல தலைவர் ஆ.பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர் மு.ராஜதுரை மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக