இளைய தலைமுறையினரை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்: வாழ்வியல் மாற்றங்களால் தடுக்கலாம் - திருநெல்வேலி மாநாட்டில் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 நவம்பர், 2025

இளைய தலைமுறையினரை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்: வாழ்வியல் மாற்றங்களால் தடுக்கலாம் - திருநெல்வேலி மாநாட்டில் வலியுறுத்தல்.

இளைய தலைமுறையினரை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்: வாழ்வியல் மாற்றங்களால் தடுக்கலாம் - திருநெல்வேலி மாநாட்டில் வலியுறுத்தல்.

திருநெல்வேலி:அசோசியேஷன் ஆஃப் ஃபிசிஷியன்ஸ் ஆஃப் இந்தியா (API) அமைப்பின் திருநெல்வேலி கிளை சார்பாக, நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) குறித்த 'மெட்டபாலிக் கான்பரன்ஸ்' என்ற மருத்துவ மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த மிகச் சிறந்த மருத்துவர்கள் பங்கேற்று, நீரிழிவு நோய் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

நீரிழிவு நோய் வந்துவிட்டால், புதிய மருந்துகள் மூலம் பின்னாளில் வரக்கூடிய சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு போன்ற சிக்கல்களை எவ்வளவு காலம் தள்ளிப் போடலாம் அல்லது குணப்படுத்தலாம் என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad