வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பிரமேலதா தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வரவேற்பு வாழ்த்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 நவம்பர், 2025

வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பிரமேலதா தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வரவேற்பு வாழ்த்து!

வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பிரமேலதா தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வரவேற்பு வாழ்த்து!
வேலுர் , நவ 5 -

வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பிரமேலதா தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வரவேற்பு வாழ்த்து!இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்ககல்வி)  பணியாற்றி பதவி உயர்வின் மூலம் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்ற ஆர்.பிரேம லதா அவர்களுக்கு  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்டகிளையின் சார்பில் சால்வை அணிவித்து அறிவியல் வெளியீட்டு நூல்கள் வழங்கி வரவேற்பும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர். செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சா.குமரன், இணை ஒருங்கிணைப் பாளர் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் கே.விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள ஆர்.பிரே மலதா அவர்களை அலுவலகத்தில் சந்தித்து அறிவியல் வெளியீடுகள் புத்தகங்களையும் சால்வையும் அணிவித்து வரவேற்பும் வாழ்த்துகளை யும் தெரிவித்தனர்.  தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நான்கு ஆண்டுகளாக வானவில் மன்றம், அறிவியல் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றிட அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொண்டோம்.  அவர்களும் உரிய வழிகாட்டுதல் வழங்குவதாகவும் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவிகிதம் உயர்த்திட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad