தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர், அத்திமரப்பட்டியில் திமுக சார்பாக பாகம் எண் 239-ல் பூத் கமிட்டி கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர், அத்திமரப்பட்டியில் திமுக சார்பாக பாகம் எண் 239-ல் பூத் கமிட்டி கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர், அத்திமரப்பட்டியில் திமுக சார்பாக பாகம் எண் 239-ல் பூத் கமிட்டி கூட்டம்.

டிச. 22- தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதிகளில் தேர்தலின் போது பூத் முகவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை அத்திமரப்பட்டியில் நடைபெற்றது.

மேடையில் பேசிய தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி திமுக கழகச் செயலாளர் ஆர் .ஆஸ்கர் பூத் கமிட்டி வலுவாக இருந்தால் மட்டுமே ஒரு கட்சி தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற முடியும் என்றும், மக்களுக்காக மக்கள் தொடர்பான பணிகளை நேரடியாகச் செய்யும் போது மக்களிடையே நமது கட்சிக்கு நல்லெண்ணத்தை வளர்க்க முடியும் என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, மக்களுக்கு செய்யக்கூடிய நலத்திட்டங்களை இந்த பூத் கமிட்டி மூலம் மட்டுமே செய்ய முடியும். நீங்கள் மக்களுடன், மக்களிடையே வாழ்பவர்கள், எனவே வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் சிறப்பாக உழைத்தால், அதிக வாக்குகளைப் பெற முடியும் என்றார்.

இந்நிகழ்வில் விபிஆர் சுரேஷ் மற்றும் வட்டக் கழக செயலாளர் ஏ சுப்பிரமணியன், BLA 2 ரூபன். BDA சதீஷ்குமார் பிஎல்சி உறுப்பினர்கள், ஸ்ரீ ஹரி, முத்துமாணிக்கம், சகுந்தலா பெரியசாமி, சேகர், பகுதி வட்டச் செயலாளர் வசந்தி பால் பாண்டி மற்றும் பகுதி துணைச் செயலாளர் கௌசல்யாதேவி ஜெயராம் மற்றும் 
சபா உறுப்பினர்கள் சண்முகராஜ், பாக்கியமணி மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், தாஸ், பெரியசாமி, சந்தனகுமார், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad